
வெப்படை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் கீதா (38). இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள மெடிக்கல் கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார். அப்போது, மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், கீதா கழுத்தில் அணிருந்த 5 பவுன் தங்க சங்கலிைய பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கீதா வெப்படை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.