
வெண்ணெய் பிஸ்கட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 500 கிராம்
ஜீனி – கால் கிலோ
வெண்ணெய் – 125 கிராம்
சோடா – அரைத்தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – அரைத்தேக்கரண்டி
வெனிலா எஸன்ஸ் – ஒரு தேக்கரண்டி
பால் – அரை கப்
செய்முறை:
ஜீனியை நன்கு மாவாக அரைத்துக் கொள்ளவும். மைதாவினை சலித்து சுத்தம் செய்து கொள்ளவும். மைதா, ஜீனி, வெண்ணெய், பேகிங் பவுடர், சோடா, வெனிலா எசன்ஸ் ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து சிறிது சிறிதாக பாலினை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு ஒரு சப்பாத்திக் கல்லில் அரை அங்குல கனத்திற்கு சப்பாத்திகளாக இட்டு, பிஸ்கட் அச்சு கொண்டு தேவையான வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை ஒரு நெய் தடவிய தட்டில் அடுக்கி ஓவனில் வைத்து 250 டிகிரி பாரன்ஹீட்டில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.