விவேக் அக்னிஹோத்ரி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு லக்னோவில் தொடங்கியது

இந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு, விவேக் அக்னிஹோத்ரி தனது அடுத்த படமான தி வாக்சின் வார் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். லக்னோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1990 ல் காஷ்மீரி இந்துக்கள் எதிர்கொண்ட கொடுமைகளை தனது கடைசி வெளியீட்டான தி காஷ்மீர் ஃபைல்ஸ் மூலம் எடுத்துக்காட்டிய பிறகு, திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தனது வரவிருக்கும் திரைப்படமான தி வாக்சின் வார் மூலம் இன்னொரு முக்கியமான கதையை கொண்டு வரவிருக்கிறார் .இந்த படம் ஆகஸ்ட் 15, 2023 அன்று சுதந்திர தினத்தன்று 11 மொழிகளில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *