
விருதுநகர் அருகே வாலிபர் தற்கொலை – போலீசார் விசாரணை
விருதுநகர் அருகே உள்ள ஆவியூர் பகுதியை சேர்ந்தவர் சங்கிலி(35). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் நோய் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று அங்குள்ள சுடுகாட்டுக்கு சென்ற சங்கிலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.