
வாழைப்பூ வடகம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – 1
உளுந்து – 1 கப்
சின்ன வெங்காயம் – 250 கிராம்
சீரகம் – 1 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1 மேசைக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 10 – 15
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
உளுந்தை 3 மணி நேரம் ஊறவிடவும். வாழைப்பூவை பொடியாக நறுக்கவும். வெயிலில் 2 மணி நேரம் உலரவிடவும். மிளகை பொடியாக அரைக்கவும். மிளகாயை அருவல் நொருவலாக அரைக்கவும். வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் பொடியாக நறுக்கவும். உளுந்தை கொரகொரப்பாக அரைக்கவும்.
பின்பு அரைத்த உளுந்துடன் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக அரைத்த மிளகு, மிளகாய், பெருஞ்சீரகம், சீரகம், உப்பு சேர்த்து நன்றாக குழைக்கவும். சிறிய உருண்டைகளாக உருட்டி மேல் சிறிதளவு அமத்தி தட்டையாக்கி ஒரு ரேயில் அடுக்கி வெயிலில் காயவைக்கவும்.நன்றாக காயும் வரை 5 அல்லது 6 நாட்கள் வெயிலில் காயவைத்து எடுக்கவும்.