
ராஜபாளையம் அருகே இளம்பெண் தற்கொலை
ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி (25). இவருக்கு பொன்னமராவதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் கயல்விழி என்ற மகள் உள்ளார். சில வருடங்களுக்கு முன்பு பொன்னமராவதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்ற மணிகண்டன் பின்னர் வரவில்லை. இதனால் விரக்தி அடைந்த ஈஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரி சங்கீதா ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.