மொழியை வைத்து அரசியல் செய்வதை கைவிட வேண்டும்- புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்திய மொழிகள் வார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டியில்,

மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டு விட்டு, அவரவர்களுக்கு என்ன மொழி தேவையோ அந்த மொழியை கற்றுக் கொள்கிற சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இன்னொரு மொழியை கற்றுக் கொள் என்ற சொன்னவுடனேயே அதை திணிப்பு என்று தவறாக முன் நிறுத்துகிறார்கள், இது திணிப்பு அல்ல.

இனிப்பான தமிழை அனைவரும் கற்க வேண்டும். நம் தமிழை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு, மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *