
மேகாலயாவின் சுயேட்சை எம்எல்ஏ- 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சியின் பெரிலின் சங்மா, பெனடிக் மரக் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ சாமுவேல் சங்மா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எச்.எம்.ஷாங்க்லியாங் ஆகியோர் இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
அடுத்த ஆண்டு மேகாலயாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 4 முக்கிய தலைவர்களின் வருகை பாஜகவிற்கு பலம் சேர்த்துள்ளது. இது குறித்து பாஜக தேசிய செயலாளர் ரிதுராஜ் சின்ஹா கூறுகையில், “மேகாலயாவில் முக்கியமான நான்கு பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இதன்மூலம் பாஜக வலுவடையும் என்றும், மேகாலயா மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவோம் என்றும் நம்புகிறேன்” என குறிப்பிட்டார்.