
மீண்டும் பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த நடிகர் ஜீவா
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தற்போது ஜீவா நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தை இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிகண்டன் தயாரிக்கவுள்ளார். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் தொடங்கியது. பெரும் பொருட்செலவில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் மூலம் ஜீவா இரண்டாவது முறையாக இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இணைந்துள்ளார்.