மீண்டும் இணையும் ஈரம் பட கூட்டணி

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான ‘ஈரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரன்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமனின் இசையமைத்த இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் ஈரம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்திற்கு ‘சப்தம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *