
மான்வேட்டை படம் வசூல்வேட்டை காண வேண்டும்.. தயாரிப்பாளர் கே.ராஜன்
இயக்குனர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மான் வேட்டை. இப்படத்தை டி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, “இயக்குனர் திருமலை அனைவருக்கும் உதவ கூடிய நல்ல உள்ளம் கொண்ட நபர். இந்தப் படத்தை சிறப்பான முறையில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். மான்வேட்டை படத்தை கடின உழைப்பையும், அர்பணிப்பையும் அளித்து உருவாக்கி இருக்கின்றனர். இந்த படம் வசூல்வேட்டை காண வேண்டும். இந்த படம் வெற்றி பெற்றால் பல சிறிய தயாரிப்பாளர்கள் வருவார்கள். படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்றார்.