
மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடக்கிறது.பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று (15ம் தேதி) மக்களவையில் விளக்கம் அளித்தார். அவரது விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.