
புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து
புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறிய படகு ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்துள்ளது. சுமார் 50 குடியேறிகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகு கடும் குளிரில் உறைந்த ஆங்கிலக் கால்வாயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகாலையில் சிறிய படகுகளில் நாட்டிற்கு வரும் புலம்பெயர்ந்தோர் முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் விளக்கமளித்ததை அடுத்து ஆங்கில சேனலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடலோர காவல்படை மற்றும் கடற்படையினர் தற்போது மீட்பு பணிகளை நடத்தி கொண்டு வருகின்றனர். கென்ட் மாகாணத்தில் உள்ள டன்ஜ் நெஸ் அருகே சிறிய படகு பழுதடைந்தது. மைனஸ் நான்கு டிகிரி காற்றின் வெப்பநிலை இருந்த பகுதியில் படகு பழுதடைந்தது. படகில் சுமார் ஐம்பது பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 43 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.