
பிக்பேஷ்; ப்ரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்திய மெல்பர்ன் ரெனகேட்ஸ்
பிக் பாஷ் தொடரின் 3வது ஆட்டம் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகளுக்கு இடையே கெய்ர்ன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 166 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் 144 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்த மெல்போர்ன் கேப்டன் மேடின்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.