
பவன் கல்யாண் நடிக்கும் உஸ்தாத் பகத் சிங்கில் கதாநாயகியாக நடிக்கவிருப்பது இந்த நடிகையா ..?
தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் 2016 ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான தெறியின் ரீமேக் என கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கப்பர் சிங்கிற்கு (2012) பிறகு ஹரிஷ் மற்றும் பவன் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும் . தெலுங்கில் கடைசியாக F3 படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, தற்போது சர்க்கஸ் படத்தின் வெளியீட்டிற்காக எதிர்நோக்கி காத்திருக்கிறார்.