
பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 6 பேர் பலி
உத்தரபிரதேசத்தின் நாக்லா கங்கர் பகுதியில் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தது. இதில் ஒரு வயது சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்கள் ரீனா (22), அவரது ஒரு வயது மகன் அயன்ஷ், படேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25) மற்றும் கவுசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த சந்த் லால் (70) என அடையாளம் காணப்பட்டனர். உயிரிழந்த மற்ற இருவரின் அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.