
படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள்: வீடு வீடாக ஆய்வு
2022-2023ஆம் கல்வியாண்டில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களின் விவரங்களை சேகரிக்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விவரங்களின் அடிப்படையில், குழந்தைகள் இல்லங்களுக்குச் சென்று, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க களப்பணி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 19ம் தேதி முதல் ஜனவரி 11ம் தேதி வரை ஆசிரியர்கள் களப்பணி மேற்கொள்ள தலைமை ஆசிரியர் கேட்டுக் கொண்டுள்ளார்.