
நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்த நாள் டிசம்பர் 14
1941 – உக்ரைனின் கார்க்கிவ் நகரின் நாசி ஜேர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1946 – ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.
1955 அல்பேனியா, ஆஸ்திரியா, பல்காரியா, கம்போடியா, இலங்கை, பின்லாந்து, அங்கேரி அயர்லாந்து, இத்தாலி, யோர்தான், லாவோசு, லிபியா, நேபாளம், போர்த்துகல், உருமேனியா, எசுப்பானியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தன.
1962 – நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளிக் கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.