நவீன இந்தியாவை உருவாக்கியவர் அப்துல் கலாம்- தமிழக ஆளுநர் புகழாரம்

சென்னை எம்.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்த அதன் அடியில் வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களை வடிவமைப்பதில் எம்.ஐ.டி. சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் கலாமை எம்.ஐ.டி.நிறுவனம் உருவாக்கியது பாராட்டுக்குரியது. நாட்டிற்காக தன் வாழ்வை வாழ்ந்த ஏவுகணை நாயகன் அப்துல்கலாம். சாதிக்க வானமே எல்லை என்ற அவரது எண்ணங்களே இளைஞர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது.

அப்துல்கலாம் வகித்த உயர் பதவி இளைஞர்களுக்கு உண்மையான உத்வேகம் அளிக்கிறது. சிறந்த தலைவரான அவர், எளிமையானவராகவும், பணிவானவராகவும் இருந்தார். நமது நாட்டை நன்கு புரிந்து கொண்டு அதன் பாரம்பரியத்தையும் பெருமையையும் நிலை நிறுத்தினார், நவீன இந்தியாவை அவர் உருவாக்கினார் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *