
தென் கொரியாவில் ஒரே நாளில் 84,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
சியோல்: சீனாவைப் போலவே, தென் கொரியாவும் கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக மீளப் போராடி வருகிறது. அங்கு திடீரென கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அந்த வகையில் தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 84 ஆயிரத்து 571 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 46 பேர் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.