துபாயில் இருந்து கேரளா சென்ற விமானத்தில் ரூ.1.28 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருவனந்தபுரம்: துபாயில் இருந்து நேற்று கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு விமானம் வந்தது. பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த 3 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பின் தனித்தனியாக அழைத்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் உடலில் தங்கத்தை கேப்சூல் வடிவில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 3 பேரிடம் இருந்து மொத்தம் 1015.80 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.28 கோடி. இதனை கடத்திய 3 பயணிகளை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *