
தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நடிகை குஷ்புவின் அண்ணன்
நடிகை குஷ்பு நேற்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான், நான் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்தேன்… இதுக்கு காரணம், என் மூத்த அண்ணன் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்… இப்போது அவரது உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது… அவருக்காக நீங்கள் எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்கள்… பிரார்த்தனை செய்யுங்கள்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தது கொண்டுள்ளார்.