திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ரஜினி

நடிகர் ரஜினி தனது பிறந்த நாளையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி மகள் ஐஸ்வர்யாவுடன் நேற்று இரவு திருமலைக்கு வந்தார். நடிகர் ரஜினிகாந்துக்கு திருப்பதி தேவஸ்தான உதவி செயல் அலுவலர் ஹரிநாத் பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளித்தார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தேவஸ்தானத்திற்கு சொந்தமான டி.எஸ்.ஆர் கெஸ்ட் ஹவுஸில் இரவு தங்கினார். இன்று அதிகாலை கோவிலின் மகா துவாரம் வழியாக சென்று சுப்ரபாத சேவையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஜஸ்வர்யாவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தரிசனம் முடித்து வந்த அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் வைத்து லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *