
திருச்சி மார்க்கெட்டில் வாகனம் திருட்டு
திருச்சி மார்க்கெட்டில் இன்று அதிகாலை காய்கறி வாங்குவதற்காக ரவிச்சந்திரன் என்ற வியாபாரி வந்தார். அவர் அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு காய்கறிகள் வாங்குவதற்காக சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார் . இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.