
திருச்சி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
திருச்சி ராம்ஜி நகரில் அதிகளவு கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்(38), சங்கர்(52) ஜெயக்குமார்(46) ஆகிய மூன்று பேரிடமிருந்து விற்பதற்காக வைத்திருந்த மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனார்.