
திருச்சியில் செல்போன் கடையில் கொள்ளை முயற்சி
திருச்சி, வரகனேரி பஜாரில், சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான செல்போன்கடை உள்ளது. இந்த கடையில், நள்ளிரவு கொள்ளையர்கள் ஷட்டர் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அப்போது ஷட்டர் உடைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதையடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.