
தற்சமயம் புதிய சட்டத்தை நிறைவேற்றிய நியூசிலாந்து அரசு
நியூசிலாந்து 2025ம் ஆண்டுக்குள் புகை இல்லாத நாடாக மாற உள்ளது. இளைய தலைமுறையினருக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்யும் மசோதாவை நியூசிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. உலகில் ஒரு நாடு புகைபிடிப்பதை முற்றிலுமாக தடை செய்தது இதுவே முதல் முறை. நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் 43க்கு எதிராக 76 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 1, 2009க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை இந்த மசோதா தடை செய்கிறது.