
தருமபுரி பேருந்து நிலையத்தில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம்
தருமபுரி புறநகர் பஸ் நிலையத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்திய நபர்களை மடக்கி அபராதம் விதித்தனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் உள்ளே நுழையாமல் அப்படியே திரும்பி சென்றனர். மேலும் பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருசக்கர வாகனங்களில் நுழைய முயன்றவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.