
தஞ்சை மருத்துவமனை வளாகத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த சக்திவேல் ( 41) என்பவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிகிச்சை பெறும் உறவினரை பார்க்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளும் காணவில்லை. இதுகுறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.