
தஞ்சையில் மோட்டார் சைக்கிள் திருட்டு
தஞ்சை ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருமைராஜ் (50). இவர் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை வளாகத்தில் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.