
டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் மிகப்பெரிய சாட்சி கண்டுபிடிப்பு
ஷ்ரத்தா டெல்லியில் அவரது லைவ்-இன் பார்ட்னர் அஃப்தாப் என்பவரால் 35 துண்டுகளாக வெட்டப்பட்டார். வெவ்வேறு இடங்களில் கொட்டப்பட்ட உடல் உறுப்புகளைத் தேடியதில் 13 எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மெஹ்ராலி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் ஷ்ரத்தாவின் தந்தைவழி டிஎன்ஏவுடன் ஒத்துப்போகின்றன. இதுவே இந்த வழக்கில் மிகப்பெரிய சாட்சியமாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.