
ஜப்பானில் குழந்தை பெறும் தம்பதிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம்
டோக்கியோ: கடந்த சில ஆண்டுகளாக ஜப்பானின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரத்தில், அதிக எண்ணிக்கையிலான இறப்புகளால் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு, நாட்டில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 604 பிறப்புகளும், 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இந்நிலையில், நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி குழந்தை பெற்ற தம்பதிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தை பெற்ற தம்பதிகளுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் யென் (சுமார் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம்) மானியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மானியத்தை 80 ஆயிரம் யென் (சுமார் ரூ.49 ஆயிரம்) உயர்த்தி 5 லட்சம் யென் (சுமார் ரூ.3 லட்சம்) ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை அந்நாட்டு நிதியமைச்சர் கட்சுனோபு கட்டோ தெரிவித்துள்ளார்.