
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு; 2வது நாளாக குளிக்க தடை
தேனி மாவட்டம், கம்பம் அருகே, சுருளி அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2வது நாளாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அருவிக்கு வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.