
சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த காய்ச்சல் கிளீனிக்குகள் திறப்பு
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் வேகமாக பரவியது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவில் காய்ச்சல் கிளீனிக்குகளை திறக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அதன்படி அங்குள்ள 47 பொது மருத்துவமனைகளில் 14 ஆயிரம் காய்ச்சல் கிளீனிக்குகளும் சமுதாய மருத்துவமனைகளில் 31 ஆயிரம் கிளீனிக்குகளும் திறக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கிளீனிக்குகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.