சிறுபான்மையினர் வாழ்வாதார உயர்வுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன- மத்திய மந்திரி

பாராளுமன்ற மாநிலங்கள் அவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஸ்மிருதி சுபின் இரானி, கூறுகையில்,

வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் வாயிலாக ஷகாரி வக்பு விகாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள வக்பு நிலங்களில், வர்த்தக வளாகங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், குளிர்பதனக் கிடங்குகள் உள்ளிட்டவற்றை அமைக்க வக்பு நிறுவனங்கள், வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது.

அதன்படி 2020-2021 ஆண்டில் ரூ.3 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டில் ரூ.ஒரு கோடி நிதி அளிக்கப் பட்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த, மிகவும் பின்தங்கியோர், சிறுபான்மையினர் உட்பட அனைத்துப்பிரிவினரின் நலன் மற்றும் வாழ்வாதார உயர்வுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது என கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *