
சிறந்த படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள்.. நடிகர் ரவி மரியா
இயக்குனர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மான் வேட்டை. இப்படத்தை டி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரவி மரியா பேசியதாவது, “நண்பர் திருமலைக்காக மட்டுமே இந்த விழாவிற்காக வந்தேன். இந்த படம் வெற்றி பட வரிசையில் இணைய வேண்டும். திருமலை எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க கூடிய நல்ல மனிதர். நல்ல படம் எப்பொழுதும் வெற்றி பெறும். சிறந்த படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். அந்த வரிசையில் இந்த மான்வேட்டை படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார்.