
சாய் தரம் தேஜாவின் விருபாக்ஷாவின் டைட்டில் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியது
தெலுங்கில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா புரொடக்ஷன் ஹவுஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் மூலம் பான் இந்தியன் மிஸ்டிக் த்ரில்லர் விருபாக்ஷாவின் டைட்டில் க்ளிம்ப்சஸ் வீடியோ வெளியிடப்பட்டது. விருபாக்ஷா உச்ச நாயகன் சாய் தரம் தேஜாவின் பதினைந்தாவது படம் ஆகும் . இந்த படத்தை கார்த்திக் தந்து இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர்களான பிவிஎஸ்என் பிரசாத் கரு மற்றும் பாபினீத் கரு ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர்கள். மலையாளத்தின் விருப்பமான நடிகை சம்யுக்தா மேனனும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் 1990 களில் காடுகளை ஒட்டிய கிராமத்தில் நடக்கும் கதைக்களம் கொண்டதாகும் .