
சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபல தொங்கு பாலத்தில் இருந்து குதித்து இந்திய சிறுவன் தற்கொலை
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கோல்டன் கேட் என்ற புகழ்பெற்ற தொங்கு பாலம் உள்ளது. நகரின் அடையாளமாக விளங்கும் இந்த தொங்கு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 1937ல் பாலம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 2 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அமெரிக்காவை சேர்ந்த 16 வயது இந்திய சிறுவன் இந்த தொங்கு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். அவரது சைக்கிள் மற்றும் செல்போன் மற்றும் கைப்பை ஆகியவை பாலத்தின் மீது அனாதையாக கிடந்தன. இதையடுத்து அவரது உடலை கடலோர காவல் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பையன் ஏன் இந்த முடிவைத் தேடினான் என்று எனக்குத் தெரியவில்லை. காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.