
சங்கராபுரத்தில் சாராயம் விற்ற 4 பேர் கைது
சங்கராபுரம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர் . அப்போது அங்குள்ள வீடுகள், வயல்வெளிகளில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (58), சேஷசமுத்திரத்தை சேர்ந்த முத்து (71), பூட்டை கிராமத்தை சேர்ந்த மார்க்ஸ் லெனின் (39), நெடுமானூரை சேர்ந்த முத்தம்மாள் (58) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.