
கோலி சோடா பட நடிகை சாந்தினிக்கு கல்யாணமாகி.. குழந்தையெல்லாம் இருக்கா….?
தமிழ் சினிமாவில் 2014ம் ஆண்டு இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலி சோடா படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடித்த நடிகை சாந்தினிக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தையே இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோலி சோடா படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தியிருந்தது . அந்த படத்தில் ஹீரோயினாகவும் ஸ்கூல் பெண்ணாகவும் சாந்தினி எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். ஆயினும் , நீண்ட காலம் சினிமாவுக்கெல்லாம் இவர் காத்திருக்கவில்லை. உடனடியாக திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார் சாந்தினி. அவரது கணவர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த சாந்தினி சமீபத்தில் தனது குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகி, குழந்தையே பிறந்துடுச்சா என கேட்டு வருகிறார்கள் .