
காய்கறி வடை செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
கடலைப்பருப்பு – அரை கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்
மைதா – அரை கப்
முட்டைக்கோஸ் – கால் கிலோ
காரட் – 1
பெரிய வெங்காயம் – 1
கொத்தமல்லி – ஒரு கட்டு
பச்சைமிளகாய் – 5
இஞ்சி – சிறுத் துண்டு
நெய் – அரைத் தேக்கரண்டி
புளித்தமோர் – கால் கப்
உப்பு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
கடலைப்பருப்பையும் உளுத்தம்பருப்பினையும் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். முட்டைக்கோஸ், பெரிய வெங்காயம், காரடை சின்னதாக நறுக்கிக் கொள்ளவும். ஊறின பருப்புகளுடன் கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு இவற்றைச் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள வெங்காயம், முட்டைக்கோஸ் மற்றும் காரட்டை அரைத்து வைத்துள்ள மாவில் போடவும். மைதா மாவு, நெய், புளித்த மோர் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து வடை மாவு பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் மாவினை வடைகளாகத் தட்டிப் போட்டு எடுக்கவும்.