காந்தியின் கொள்கைகளை உலகம் முழுவதும் பரபரப்ப வேண்டும் – ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தனர். ஐ.நா.சபைக்கு இந்தியா பரிசாக அளித்திருந்த இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சிலை நிறுவப்படுவது இதுவே முதல்முறை.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், உலகம் முழுவதும் வன்முறை, மோதல் மற்றும் மனிதாபிமானமற்ற நிலை காணப்படுகிறது. உலகம் முழுவதும் அமைதியை உறுதி செய்ய மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் லட்சியங்கள் பின்பற்ற வேண்டும்.

காந்தி அகிம்சை, உண்மை மற்றும் அமைதியின் சின்னம் என்றும், இது (மகாத்மா சிலை) எதிர்கால சந்ததியினருக்கு உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான நமது கடமையை நமக்கு நினைவூட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *