
காட்டில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளுடன் ஷ்ரதாவின் தந்தையின் டிஎன்ஏ ஒத்துப்போகிறது
ஷ்ரத்தா வாக்கரின் தந்தையின் டிஎன்ஏ, மெஹ்ராலி வனப்பகுதியில் இருந்து டெல்லி போலீசார் மீட்டெடுத்த எலும்புகளுடன் ஒத்துப்போவதாக மத்திய தடய அறிவியல் ஆய்வகம் உறுதி செய்துள்ளது. அவரது தாடை உட்பட 13 எலும்பு துண்டுகளை போலீசார் மீட்டுள்ளனர். அவை ஷ்ரத்தாவைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்த, அது அவரது தந்தையின் டிஎன்ஏ பொருத்தத்திற்கு அனுப்பப்பட்டது.