
கத்தார் நாட்டின் தேசிய தினத்தையொட்டி டிசம்பர் 18ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு
கத்தார் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அமிரி திவானின் அறிவிப்பின்படி, டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை நாட்டில் அதிகாரப்பூர்வ விடுமுறையாக இருக்கும். கத்தார் தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியும் அன்றுதான் நடைபெறுகிறது.