
கடத்தூர் அருகே விபத்தில் வாலிபர் படுகாயம்
தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியை சேர்ந்த சௌந்தரராஜ் மகன் சக்தி. இவர் கடத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் தாளநத்தம்- புட்டிரெட்டிப்பட்டி ரெயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த டிராக்டர் சக்தியின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை கடத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற சக்தி பின்பு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து போலீசார் தலைமறைவாகியுள்ள டிராக்டர் ஓட்டுனர் மீது கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.