
‘ஓ மேரி லைலா’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
மலையாளத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் ‘ஓ மேரி லைலா’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 23ஆம் தேதி திரைக்கு வெளி வரவுள்ளது. அபிஷேக் கே ஓ மெரி லைலா இயக்கியிருக்கும் இந்தப் படம் கல்லூரி பின்னணியில் நடக்கும் கதை கொண்டதாகும். பால்ஸ் எண்டர்டெயின்மென்ட் பேனரில் டாக்டர் பால் வர்கீஸ் இப்படத்தை தயாரித்துள்ளார். ட்ரீம் பிக் பிலிம்ஸ் இப்படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் புதுமுகம் அனுராஜ் ஓபி.அந்தோணி வர்கீஸ் இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.