
ஓமனுக்கான சேவையை ஆரம்பித்துள்ள விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம்
இந்திய விமான நிறுவனமான விஸ்டாரா ஏர்லைன்ஸ் ஓமன் நாட்டுக்கு சேவையை தொடங்கியுள்ளது. வாரத்திற்கு ஏழு சேவைகள் இருக்கும். ஏ320 நியோ விமானம் மூலம் இந்த சேவை இயக்கப்படும். விஸ்தாராவின் முதல் சேவை மஸ்கட்-மும்பை வழித்தடத்தில் உள்ளது. மும்பையில் இருந்து தினமும் இரவு 8.30 மணிக்கு புறப்படும் விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 9.35 மணிக்கு மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகிறது. அதையடுத்து அங்கிருந்து இரவு 10.55 மணிக்கு புறப்படும் விமானம் இந்திய நேரப்படி அதிகாலை 3.10 மணிக்கு மும்பை சென்றடையும் என தெரிவிக்கப்படுகிறது .