
ஓமனில் சிகிச்சை பலனின்றி இந்திய நபர் உயிரிழப்பு
இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த இளைஞர் ஓமனில் உயிரிழந்தார். மஸ்கட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வாலச்சிறையை சேர்ந்த பி.பி.ஜோசப் மகன் பீட்டர் ஜோசப் (30) உயிரிழந்தார். அந்த வாலிபர் ரூவி எம்பிடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது தாய் – மெரினா ஜோசப். மனைவி – அனுபா ஜானி. இவரது மனைவி ஓமன் நாட்டில் உள்ள சுகாதார அமைச்சகத்தில் செவிலியராக பணிபுரிகிறார்.