
ஐநா தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலை
இந்தியா வழங்கிய மகாத்மா காந்தியின் சிலை நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வடக்கு புல்வெளியில் நடைபெற்ற விழாவில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சிலையை திறந்து வைத்தார்கள் . மேலும், மகாத்மா காந்தியின் விருப்பமான ‘வைஷ்ணவ் ஜன் தோ’ என்ற பஜனை ஓதப்பட்டு, ‘தேசத்தந்தை’க்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.