எதிர்கால தலைமுறையினர் மாசு இல்லாத காற்றை சுவாசிப்பதை உறுதி செய்ய வேண்டும்- குடியரசு தலைவர்

தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள், புதுமை கண்டுபிடிப்பு விருதுகள் மற்றும் தேசிய ஓவியப் போட்டிக்கான பரிசுகள் ஆகியவற்றை வழங்கினார்.

தொடர்ந்து மின்னணு வாகனங்களுக்கு அருகில் உள்ள சார்ஜிங் நிலையங்களை கண்டறிய உதவும் ஈவி-யாத்ரா என்ற இணைய தளத்தையும் தொடங்கி வைத்து பேசிய அவர், தூய்மையானக் காற்றை சுவாசிப்பது மனிதனின் அடிப்படை உரிமை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் பல்வேறு மனித உரிமைகளை நாம் பாதுகாக்க முடியும்.

எதிர்காலத் தலைமுறையினர் மாசு இல்லாத காற்றை சுவாசிப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும், அவர்கள் ஆரோக்கியமாக நலமுடன் வாழ்வதே நமது முதன்மையான குறிக்கோள். எரிசக்தி சேமிப்பு என்பது நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்தது. பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற சவால்களை எதிர்கொள்ள அது உதவும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *